Monday, April 19, 2010

கற்பனையா இது...? இல்லை.

நானும் நீயும் நம் வாழ்கையில்....கற்பனையா இது...? இல்லை.

முந்தின நாள் மழையில் நனைந்த பொழுது நான் நினைத்தது, நீயும் நானும் நம் குழந்தைகளும் சேர்ந்து மழையில் நனைந்து விளையாட வேண்டும் என்று.

நம் வீட்டில் நான் செய்யும் அனைத்து வேலைகளிலும் உன்னோட இடைஞ்சல் வேண்டும் என்பதுபோல்
என் மீது நீ சாய்ந்து கொண்டு, படுத்து கொண்டு , அடித்துக்கொண்டு, கையை பிடித்துகொண்டு, உரசிக்கொண்டு, பேசிக்கொண்டு ஆனாலும் நான் வேலை செய்து கொண்டு இருப்பேன். நீ செய்வதை ரசித்துக்கொண்டு பிடிக்காது போல் நடித்துகொண்டு இருப்பேன்,

உனக்காக எல்லா சனிக்கிழமையும் லீவ் எடுத்துக்கொண்டு உன்னோடு இருக்கின்றேன் நான் (எனக்காவும்) . இல்லையென்றால் சனிகிழமை நீ என் ஆபீஸ்க்கு வந்து விடுகிறாய், நாம் லவ் பண்ணும் போது நீ வந்தது போல் நாம் அதை தொடர்கின்றோம்..

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணபடுக்கையிலும் மறக்காது கண்ணே...!

எப்படி எழுதுவது உன்னோட வாழ்ந்துகொண்டு இருப்பதை, வார்த்தைகளால் வரிகளால் கூற முடிமா..?

நாம் செய்ததில் மிகவும் பிடித்தது எனது கையில் உனது பெயரையும் உனது கையில் எனது பெயரையும் பச்சை குத்திகொண்டதுதான், கடைசியாக நாம் என்ன கொண்டு வந்தோம் என்பதை கடவுளுக்கு கட்டுவதற்காக ...

நேற்று நான் உனக்கு சேலை வாங்கினேன், வாங்கிய போது எனக்கு சேலை அவ்வளவாக திருப்தி இல்லை, அனால் நீ கட்டி வந்த பிறகு திருப்தியாக இருந்தது, அழகாவும் இருந்தது உனக்கு...

சொல்ல மறந்து விட்டேன் நீ என்மீது சாய்ந்துகொண்டும் படுத்துக்கொண்டும் நான் உன்மீது சாய்ந்து கொண்டும் படுத்துக்கொண்டும் நீ கவிதை எழுதும் அழகை நான் ரசித்துகொண்டே இருப்பேன். அதுவும் என்னைபற்றிய கவிதையை எழுதும் போது நான் என்னை மறந்து பார்த்துகொண்டு இருப்பேன். எவ்வளவு அழகான விலைமதிப்பற்ற திரும்ப கிடைக்காத நிமிடங்கள் அவை.

நான் உன்னை திட்டுவதை கூட ரசித்துபார்த்துகொண்டு இருக்கும் உன்னை திட்டுவதை விட்டுவிட்டு சிரித்த நாட்கள் அதிகம்

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. wow,

    cute..epadium oru kavithai..nice.
    migavum rasithen

    ReplyDelete
  3. நான் உன்னை திட்டுவதை கூட ரசித்துபார்த்துகொண்டு இருக்கும் உன்னை திட்டுவதை விட்டுவிட்டு சிரித்த நாட்கள் அதிகம்
    ...Nice.

    ReplyDelete